விடாது துரத்தும் சனாதன சர்ச்சை… அமைச்சர் உதயநிதிக்கு சம்மன் அனுப்பிய கர்நாடகா உயர்நீதிமன்றம்..!!

Author: Babu Lakshmanan
2 February 2024, 8:16 pm

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதியை நேரில் ஆஜராக கர்நாடக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்து அறசிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் சேகர் பாபு கலந்து கொள்ளலாமா..? என்றும், சனாதனத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது, இந்து மதத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு சமம் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அமைச்சர் உதயநிதியின் சனாதன பிரச்சனை அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சால் இந்தியா முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. உதயநிதியின் கருத்துக்கு பல்வேறு தரப்பும் கண்டனங்கள் தெரிவித்தன. பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பாக நாட்டில் பல்வேறு இடங்களிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, பரமேஷ் என்ற நபர் கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு மார்ச் 4ம் தேதி ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதிக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

  • டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!