நீதிமன்ற உத்தரவையும் மீறி ஹிஜாப்புடன் பள்ளிக்கு வந்த மாணவிகள்: திருப்பி அனுப்பிய நிர்வாகம்…!!(வீடியோ)

Author: Rajesh
14 February 2022, 4:53 pm

கர்நாடகா: நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவையும் மீறி பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்து மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாக் அணிந்து வருவதற்கு பள்ளிகள் தடை விதிக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹிஜாப் விவகாரத்திற்கு எதிராக இந்து மாணவ, மாணவிகள் காவி அணிந்து பள்ளிக்கு வந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்த பதற்றமான சூழல் காரணமாக கடந்த பிப்.8ம் தேதி முதல் கர்நாடகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

https://twitter.com/BossTemlen/status/1493005204467294208

இதனை தொடர்ந்து, மாநிலத்தில் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாண்டியா மாவட்டத்தில் உள்ள ரோட்டரி பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளியின் நுழைவு வாயிலிலேயே ஆசிரியர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, பள்ளி வகுப்பறைக்குள் அனுமதிக்குமாறும், வகுப்பறைக்கு சென்ற பின் குழந்தைகள் ஹிஜாப் அணிய மாட்டார்கள் எனவும் பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, ஷிமோகாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதாக கூறி கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், மாணவிகள் ஹிஜாபை கழற்ற மறுத்துவிட்டதால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1010

    0

    0