‘அந்த மனசுதான் சார் கடவுள்’… மாற்றுத்திறனாளிக்காக வீதியில் பாட்டு பாடிய பள்ளி மாணவி ; வைரலாகும் வீடியோ!!!

Author: Babu Lakshmanan
6 June 2023, 1:05 pm

மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக தெருவில் பாட்டு பாடிய 10ம் வகுப்பு மாணவியின் செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

கேரளா – பாலக்காடு அருகே உள்ள நிலம்பூரியில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோ ஒன்று சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் பாடல் பாடிக் கொண்டிருந்த நிலையில், அவரது மனைவி குழந்தையுடன் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். பாடலுக்கு நடுவே தனது குடும்ப நிலையையும் கூறி அவர்கள் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அந்த சமயம், 10ம் வகுப்பு பயிலும் ஆதிரா என்ற மாணவி தனது தந்தையுடன் படிப்புக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அங்கு வந்தார். அப்போது, அங்கு நடக்கும் நிகழ்வை பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

தன்னுடைய குரல் மங்கிய நிலையிலும் அந்தப் பெண் தொடர்ந்து பாடல் பாட முயன்றதை அறிந்த ஆதிரா, தனது தந்தையுடன் இணைந்து அவருக்கு டீ வாங்கிக் கொடுத்து சாப்பிடும் படி கூறியுள்ளார். அதோடு, அவரை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு, மைக்கில் அந்தப் பெண்ணின் குடும்பத்திற்காக ஆதிரா பாடல் பாடினார்.

தெருவில் யாசிக்கும் ஏழைக் குடும்பத்திற்காக மாணவி ஆதிரா இரண்டு பாடல்களை பாடினார். மாணவி பாடல் பாடுவதை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஆதிரா படிக்கும் பள்ளிக்கே சென்று பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 728

    2

    0