காப்பி அடிப்பதாகக் கூறி சீருடையை கழற்றி நிர்வாணமாக்கிய ஆசிரியர்… அவமானம் தாங்காமல் மாணவி தீக்குளித்து தற்கொலை..!!

Author: Babu Lakshmanan
15 October 2022, 11:12 am

தேர்வின் போது காப்பி அடிப்பதாகக் கூறி, ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடைகளை கழற்றி நிர்வாணமாக்கிய அவமானத்தால் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பங்கேற்க வந்த மாணவி ஒருவரை, பிட்டு சீட்டு வைத்திருக்கிறாயா..? என்று தேர்வை கண்காணிக்கும் ஆசிரியர் கேட்டுள்ளார். அதற்கு மாணவி இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மாணவி மீது ஆசிரியருக்கும் சந்தேகம் இருந்ததாகவும், இதனால், தேர்வு அறைக்கு அருகே இருந்த மற்றொரு அறைக்கு மாணவியை அழைத்து சென்று, மாணவியின் ஆடையை கழற்றச் செய்து நிர்வாணமாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஆசிரியரின் இந்த செயலால், ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், இதனால், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக தீக்குளித்ததாக மாணவி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, ள்ளியில் இருந்து வந்த சிறிது நேரத்திலேயே அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்தார் செய்து கொண்டதாக மாணவியின் தாய் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  • Vedhika Marriage News அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!