பள்ளி மாணவர்கள் பைகளில் ஆணுறைகள்.. புத்தகமே இல்ல : கருத்தடை மாத்திரைகள், சிகரெட்டுகள்.. பெற்றோர்கள் ஷாக்!!
Author: Udayachandran RadhaKrishnan30 November 2022, 6:14 pm
தமிழகம் முழுவதும் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்படமாட்டாது என்று நம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு பள்ளி ஒன்றில், மாணவர்களிடம் திடீரென நடத்தப்பட்ட சோதனையில் போதை பொருட்கள் உட்பட சில பொருட்கள் சிக்கி உள்ளன.
கர்நாடக மாநிலத்திலும், சில பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து, மாணவர்களின் பைகளை சோதனை செய்ய தொடங்கினர்.
அந்தவகையில், அங்கு செயல்பட்டு வரும் கேஏஎம்எஸ் பள்ளியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்படி சோதனை நடத்தியபோது, செல்போன்கள் தவிர, அந்த மாணவர்களின் பைகளில் ஆணுறைகள் இருந்திருக்கின்றன.
அதுமட்டுமல்ல, அந்த பைகளில் வாய்வழி கருத்தடை சாதனங்கள், சிகரெட் லைட்டர்கள், சிகரெட்டுகள், ஒயிட்னர்கள், ஏகப்பட்ட பணம் போன்றவைகள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இவ்வளவும், 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்ததை கண்டு அதற்கு மேல் அதிர்ந்து போய்விட்டனர். இதுகுறித்து பெற்றோர்-ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, நடந்த சம்பவத்தையெல்லாம் கேட்டு பெற்றோர்களே அதிர்ந்தனர். குழந்தைகளின் திடீர் நடத்தை மாற்றங்கள் குறித்தும் பெற்றோர்கள் அந்த கூட்டத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாணவர்களை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் அல்லது சஸ்பெண்ட் செய்வதற்கு பதிலாக, அந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க பெற்றோர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒரு பள்ளி முதல்வர் இதுகுறித்து கூறும்போது, 10ம் வகுப்பு சிறுமியின் பையில் ஆணுறை இருந்திருக்கிறது.. இதை அவளுடன் படிக்கும் சக தோழிகளும், அந்த மாணவியின் டியூஷன் நண்பர்களும் பார்த்தார்களாம்.
கேஎம்எஸ் பொதுச்செயலாளர் சஷி குமார், பள்ளியில் நடத்தப்பட்ட சோதனை பற்றி சொல்லும்போது, “ஒரு மாணவியின் பையில், வாய்வழி கருத்தடை மருந்துகள் (ஐ-பில்) இருந்தன… தண்ணீர் பாட்டில்களில் மது கலந்து இருந்தது.
இந்த மாணவர்கள், தங்களின் ஆசிரியர்கள், நண்பர்களை கேவலமாக பேசியுள்ளதும், அவர்களை பார்த்து மோசமான சைகைகள் காட்டி வந்துள்ளதும், இப்படி செய்தது 5ம் வகுப்பு குழந்தைகள் ஆவர் என்றும் அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்.
இதையெல்லாம் கேட்டு கர்நாடகமே அதிர்ந்து போயுள்ளது.. மாணவர்களுக்கு கவுன்சிலிங் தந்து, அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
0
0