பள்ளி தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த இரு ஆசிரியைகள் ; பள்ளிக்குள் நடந்த குடுமிப்பிடி சண்டை.. அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan26 May 2023, 8:15 pm
தலைமை ஆசிரியையை இரு ஆசிரியைகள் அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோரியா பஞ்சாயத்துக்குட்பட்டு பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அனிதா குமாரி என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். வழக்கம் போல அவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்த போது, அங்கு வந்த தலைமை ஆசிரியை காந்திகுமாரி வகுப்பறை ஜன்னலை மூடுமாறு கூறி உள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
வாய்த்தகராறு முற்றியதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. வகுப்பறையின் நுழைவு வாயிலில் தொடங்கிய இவர்களின் சண்டை, மைதானம் வரை நீடித்தது. தலைமை ஆசிரியை காந்திகுமாரியை அனிதா குமாரியும் மேலும் ஒரு ஆசிரியையும் சேர்ந்து கம்பு மற்றும் காலணியால் தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டார கல்வி அலுவலர் சரேஷ் தெரிவித்துள்ளார்.