நாடாளுமன்றத்திற்குள் புகுந்த மர்மநபர்கள்… எம்பிக்கள் மீது கலர் புகைக்குண்டுகள் வீச்சு… 2 பேர் கைது ; டெல்லியில் பதற்றம்…!!

Author: Babu Lakshmanan
13 December 2023, 1:55 pm

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி புகுந்து கலர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், வழக்கம் போல குளிர்காலக் கூட்டத் தொடருக்கான இரு அவைகளும் இன்று காலை கூடியது. அப்போது, மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி எம்பிக்கள் அமரும் பகுதிக்குள் 2 பேர் நுழைந்துள்ளனர்.

மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து கலர் புகைக்குண்டுகளை மர்ம நபர்கள் வீசியதால் பரபரப்பு நிலவியது. எம்பிக்களின் இருக்கைகள் மீது ஏறி குதித்து கூச்சலிட்ட இருவரையும் அவை காவலர்கள் மடக்கி பிடித்தனர். 2 மர்மநபர்கள் அத்துமீறி நுழைந்ததால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இரு மர்ம நபர்கள் மக்களவைக்கு புகுந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!