காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் விலகல்.. ராகுல் யாத்திரை இன்று தொடங்கும் நிலையில் திடீர் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2024, 10:21 am

காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் விலகல்.. ராகுல் யாத்திரை இன்று தொடங்கும் நிலையில் திடீர் அறிவிப்பு!!

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முரளி தியோரா. தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார்.

மும்பை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இதுதொடர்பாக மிலிந்த் தியோரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்கிறேன்.

இதன்மூலம் காச்ங்கிரசுடனான 55 ஆண்டு உறவு முடிவுக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்டத்தை இன்று தொடங்கவுள்ள நிலையில், மிலிந்த் தியோரா விலகியுள்ளது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!