5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமையில் பரபரப்பு தீர்ப்பு… நீதிமன்றம் போட்ட அதிரடி : கேரளத்தை உற்று நோக்கும் இந்தியா!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 12:39 pm

கேரள மாநிலம் கொச்சியில், வெளி மாநில தொழிலாளர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில், பீஹாரைச் சேர்ந்த தொழிலாளி, மனைவி மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வந்தார்.

கடந்த ஜூலை 28 ல் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்பக் ஆலம் என்பவன், ஜூஸ் வாங்கி தருவதாகக் கூறி, சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பிறகு கொலை செய்தான்.

சிறுமி உடல், கோணிப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

குற்றவாளி அஸ்பக் ஆலம் மீது பலாத்காரம், கடத்தல், கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவன் மீதான வழக்கு எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கே. சோமன், அஷ்பாக் ஆலமுக்கு தூக்கு தண்டனையும், 5 ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். சம்பவம் நடந்து 109 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?