RAPIDO ஓட்டுநர் கொடுத்த பாலியல் தொல்லை… பைக்கில் இருந்த குதித்த இளம்பெண் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2023, 5:12 pm

கட்டிடக் கலைஞராகப் பணிபுரியும் 30 வயது பெண் ஒருவர் ஏப்ரல் 21 அன்று பெங்களூரு இந்திராநகர் பகுதிக்கு ரேபிடோ பைக் டாக்ஸியை முன்பதிவு செய்தார்.

அப்போது பெண் இருக்கும் இடத்திற்கு வந்த ரேபிடோ ஓட்டுநர்., OTP செக் பண்ணணும் உங்க செல்போனை கொடுங்க என கூறி, அதில் பெண் செல்லும் இடத்தை மாற்றியுள்ளார்.

பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் பெண்ணை அமர வைரத்து வேறு வேறு வழிகளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண் ஏன் வேறு வழியில் அழைத்து செல்கிறீர்கள் என கேட்டதற்கு, ரேபிடோ ஓட்டுநர் எந்த பதிலும் சொல்லவில்லை.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்த பெண், ஓட்டுநரிடம் இருந்து தனது செல்போனை எடுத்து தனது நண்பருக்கு உதவி கேட்டுள்ளார். அப்போது ஓட்டுநர் சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்துள்ளார். உடனே அந்த பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.

பிஎம்எஸ் கல்லூரி அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் அந்த வழியாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து பெண் கொடுத்த புகாரையடுத்து, ஆந்திராவை சேர்நத் தீபக் ராவ் என்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அந்த பெண்ணை வேறு வேறு வழிகளில் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, பாலியல் அத்துமீறல், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?