Categories: இந்தியா

“மனைவியின் இறப்பு-துக்கத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட உள்துறை செயலாளர்”!

அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் உள்துறை மற்றும் அரசியல் செயலராக ஷிலாத்யா சேத்யா ஐபிஎஸ் பதவி வகித்து வந்தார். 44 வயதான இவரது மனைவி போர்பருவா, இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். ஷிலாத்யா தனது மனைவியை பல்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும் அவரது மனைவியின் உடல்நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து உடல்நிலை மோசமாகவே இருந்துள்ளது. சமீபத்தில் கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக icu-வில் அனுமதித்திருந்தபோதும் கூட கடந்த சில நாட்களாக போர்பருவாவின் உடல் மிகவும் மோசமடைந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 4.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி போர்பருவா இறந்திருக்கிறார்.மனைவி இறந்த செய்தி கேட்டதும் மருத்துவமனைக்கு வந்த ஷிலாத்யா, “எனது மனைவிக்கு அஞ்சலி செலுத்தவேண்டும். ஆகையால் எனக்கு தனிமை வேண்டும்” என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அவர்களும், ICU-வில் இருந்த ஊழியர்கள் வெளியே சென்றுள்ளனர்.அடுத்த சில நிமிடங்களில் உள்ளிருந்து துப்பாக்கி சத்தம் கேட்கவும், ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அங்கு ஷிலாத்யா சேத்யா தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷிலாத்யா சேத்யாவுக்கு, போர்பருவாருடன் கடந்த 2013ல் திருமணம் நடந்து தற்போது வரை குழந்தை பிறக்கவில்லை. மேலும் சமீபத்தில் இவர் தாயாரும், இவரது மாமியாரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். வேலை பளு, குழந்தையின்மை, மனைவியின் உடல்நிலை, அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதங்கள் அனைத்தும் ஷிலாத்யாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.ஷிலாத்யா சேத்யா கிரிமினல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அதற்காக 2015ல் குடியரசுத்தலைவரின் கையால் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர்.

ஐபிஎஸ் அதிகாரியான இவர் குடியரசுத்தலைவரின் வீரப்பதக்கம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பித்தக்கது. கடந்த 4 மாதங்களாக மனைவிக்காக அவர் விடுப்பிலேயே இருந்திருக்கிறார் என தெரிகிறது.ஷிலாத்யா சேத்யா கிரிமினல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அதற்காக 2015ல் குடியரசுத்தலைவரின் கையால் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர். ஐபிஎஸ் அதிகாரியான இவர் குடியரசுத்தலைவரின் வீரப்பதக்கம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பித்தக்கது. கடந்த 4 மாதங்களாக மனைவிக்காக அவர் விடுப்பிலேயே இருந்திருக்கிறார் என தெரிகிறது. “காக்கிச் சட்டையிலும் இவ்வளவு காதலா?!” என இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Sangavi D

Share
Published by
Sangavi D

Recent Posts

ஒன்பதே நாள்ல வேற லெவல் கலெக்சன்; AKனா சும்மாவா? குட் பேட் அக்லி கல்லா கட்டிய விவரம்…

ரசிகர்களுக்கான அஜித் படம் கடந்த 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்த நிலையில் அஜித்…

15 minutes ago

வெள்ளியங்கிரி மலைக்கு ஆசை ஆசையாக வந்த தூத்துக்குடி இளைஞர்..படி இறங்கும் போது சோகம்!

தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம்…

23 minutes ago

துரை வைகோ விலகல்.. பின்னணியில் மல்லை சத்யா? அதிர்ச்சியில் வைகோ!

மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எம்பியாக உள்ள…

44 minutes ago

பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே

விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…

1 hour ago

75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…

2 hours ago

சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…

3 hours ago

This website uses cookies.