அதிர்ச்சி… மின்மாற்றி வெடித்து 15 பேர் உடல் சிதறி பலி… பயங்கர விபத்தால் உருக்குலைந்து போன கிராமம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2023, 2:29 pm
உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் திடீரென மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள நமாமி கங்கை திட்டப் பகுதியில் மின்மாற்றி வெடித்ததில் மின்சாரம் தாக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமோலி எஸ்.பி பரமேந்திர தோவல் தெரிவித்துள்ளார்.
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உத்தராகண்ட் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் வி.முருகேசன் கூறுகையில், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 5 ஊர்க்காவல்படையினர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்