9 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறிய அதிர்ச்சி : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 1:21 pm

கேரளா மாநிலம் கண்ணூரில் 9 வயது சிறுமியை தெரு நாய்கள் கூட்டமாக கடித்து இழுத்துச் செல்லும் காட்சி காண்போரை பதபதைக்க வைத்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் முழபிலாங்காடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்து வயது வாய் பேச முடியாத சிறுவனை தெரு நாய் கடித்து கொன்ற நிலையில் அதே பகுதியில் மீண்டும் தெரு நாய் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாச்சாக்கரை எல்பி பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் ஜான்விக் என்ற மாணவியை தெருநாய் கடித்துள்ளது. மூன்று தெருநாய்கள் சேர்ந்து சிறுமியை கடித்து தாக்கின.

வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து இழுத்துச் செல்ல முயன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதனை தொடர்ந்து நாய்கள் பின்வாங்கின.

தெரு நாய்கள் கடித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் தலை, வயிறு, தொடை மற்றும் கைகளில் ஆழமான காயம் ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன், கண்ணூர் முழுபிலங்காட்டில் இதே பகுதியில் தெருநாய்கள் தாக்கியதில் பத்து வயது நிஹால் என்ற சிறுவன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. நிஹாலின் மரணத்திற்குப் பிறகு, முழுபிலாங்காடு பகுதியில் இருந்து சுமார் 31 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

கேரளாவில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் கடித்து பலர் உயிரிழந்தனர். அதே போல் நூற்றுக்கணக்கான மக்கள் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மக்களின் உயிர் பறிக்கும் தெரு நாய்களை கொல்ல சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசு நடவைக்கை எடிக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்து வருகினறனர்.

சில நாட்களுக்கு முன், கண்ணூர் முழுபிலங்காட்டில் இதே பகுதியில் தெருநாய்கள் தாக்கியதில் பத்து வயது நிஹால் என்ற சிறுவன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. நிஹாலின் மரணத்திற்குப் பிறகு, முழுபிலாங்காடு பகுதியில் இருந்து சுமார் 31 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

முன்னதாக, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960இன் கீழ், விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது விலங்குகளை வதை செய்யும் பிரச்சனையும் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த விதிகளை முறையாக அமல்படுத்தி, விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு திட்டத்தை (Animal Birth control programme) உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தலாம். இதன் மூலம் விலங்குகள் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டு, தெரு நாய்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

  • கேம் சேஞ்சர்: எஸ்ஜே சூர்யா First Review?
  • Views: - 510

    0

    0