நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன் பெயர் அபிஷேக் யாதவ். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.
அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். கடந்த சில தினங்களாக பயிற்சி மையத்திற்கு செல்லாமல் இருந்த அபிஷேக் யாதவ், நேற்று தனது விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தான் சிக்கலில் இருப்பதாகவும், படிப்பால் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி, பெற்றோரிடம் தன்னை மன்னிக்கும்படி கூறியிருக்கிறார்.
எனினும் படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார். கோட்டா நகரில் இந்த ஆண்டு இதுவரை 4 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.