அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. தொப்புள் கொடி ரத்தத்துடன் தாய் செய்த கொடூரம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2022, 6:41 pm
குழந்தை பிறந்த சில மணி நேரங்களுக்குள் ஒரு தாய் தன்னுடைய குழந்தையை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் அருகே கைவிட்டு சென்றுவிட்டார்.
அந்த குழந்தையை பார்த்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் இந்த சமூகத்தில் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியதுடன் இதுபற்றி போலீஸ்க்கு தகவல் அளித்தனர்.
தெலுங்கானா மாநிலம் காசிகுடாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தையை தாய் கைவிட்டு சென்றது பற்றிய தகவல் அறிந்த காசிகுடா ஆய்வாளர் சாய்குமார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.
அடுக்குமாடி குடியிருப்பிற்கு வெளியே திறந்த வெளியில் கிடந்த அந்த குழந்தையை பார்த்த காவல் ஆய்வாளர் சாய்குமார் உடனடியாக குழந்தையை கையில் ஏந்தி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றார்.
அவருக்கு அந்த குடியிருப்பில் வசிக்கும் பெண்களும் உதவி செய்தனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் குழந்தை மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காவல் ஆய்வாளர் சாய்குமார் செயலை பார்த்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், பொதுமக்கள் ஆகியோர் இந்த சமூகத்தில் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.