திருப்பதி பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு தடை : புதிய கட்டுப்பாடுகள் அமல்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 1:19 pm

இம் மாதம் 31 ம் தேதி இரவு முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பேருந்துகளில் பயணிக்க பக்தர்களுக்கு அனுமதி.

திருப்பதியில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய ஆந்திர போக்குவரத்து கழக திருப்பதி பிராந்திய மேலாளர் செங்கல் ரெட்டி, ஜனவரி ஒன்றாம் தேதி ஆங்கில புத்தாண்டு அதை தொடர்ந்து வர இருக்கும் வைகுண்ட ஏகாதசி ஆகியவற்றை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி மலையில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இரண்டாம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை திருப்பதி மலையில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். எனவே வழக்கத்தை விட அதிக அளவிலான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வர வாய்ப்புகள் உள்ளன.

திருப்பதி திருமலை இடையே தற்போது 1100 ட்ரிப்புகள் ஆக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் கூடுதலாக வர இருக்கும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி திருமலை இடையே 1769 டிரிப்புகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து கூடுதலாக 25 பேருந்துகளை திருப்பதி மலைக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை 31ஆம் தேதி இரவு முதல் அடுத்த மாதம் பதினோராம் தேதி வரை ஏழுமலையானை வழிபடுவதற்காக ஏதாவது ஒரு டிக்கெட்டை உடன் கொண்டு வரும் பக்தர்கள் மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பேருந்துகளில் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார்.

இதன் மூலம் நாளை நள்ளிரவு முதல் 11ஆம் தேதி இரவு வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதியில் இருந்தது திருமலைக்கு செல்ல தடை விதிக்க வாய்ப்புகள் இருப்பது உறுதியாகி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி