கால்பந்து போட்டியின் போது சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த கேலரி: நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்..கேரளாவில் ஷாக்..!!

Author: Rajesh
20 March 2022, 1:59 pm

கேரளா: மலப்புரம் அருகே நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் இருந்த மரபலகையால் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் சரிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் காளிகாவ் நகரில் பூங்கோட்டில் அகில் இந்தியா 7வது கால்பந்து போட்டி இங்கு உள்ள ஒரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியை காண்பதற்கு தினசரி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து செல்கிறார்கள். ரசிகர்கள் அமர்ந்து விளையாட்டை ரசிப்பதற்காக மைதானம் சுற்றிலும் மூங்கில் மற்றும் மர பலகைகளை கொண்டு இருக்கைகள் அமைத்துள்ளனர்.

இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டிக்கு முன்னதாகவே மைதானத்துக்கு வந்துவிட்டனர். போட்டிகள் தொடங்கியது ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் ஆரவாரத்துடன் போட்டிகளை ரசிக்க தொடங்கினர். அப்போது திடீரென மைதானத்தின் மரக்கட்டைகளால் ஆன இருக்கைகள் சரிந்து விழுந்தில் 200 க்கும் மேற்பட்ட ரசிகர்களின் காயம் அடைந்தனர்.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மலப்புரம் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு காளிகாவ் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…
  • Close menu