முதல்ல இந்தியை கத்துக்கிட்டு வாங்க… முதலமைச்சர் ஸ்டாலின் மீது நிதிஷ்குமார் ஆவேசம் : இண்டியா கூட்டணிக்குள் பிளவு?!!
டெல்லியில் நேற்று “இந்தியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், அக்கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசத் தொடங்கினார்.
அப்போது டிஆர் பாலு, நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசுவதை மொழிபெயர்த்து சொல்ல வேண்டும் என்றனர்.
இதையடுத்து மனோஜ் ஜா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டிருந்தார். ஆனால் நிதிஷ்குமார் கடும் கோபத்துடன், இந்தி இந்தியாவின் தேசிய மொழி. ஆகையால் திமுக தலைவர்கள் இந்தி மொழியை கற்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போனபோதே அவர்களுடன் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்தும் போய்விட்டது என ஆவேசப்பட்டிருக்கிறார்.
அத்துடன் தமது கட்சியின் மனோஜ் ஜா, தமது இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தையும் உடனே நிறுத்துமாறும் நிதிஷ்குமார் கோபத்துடன் கூறினாராம். இது “இந்தியா” கூட்டணி கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முந்தைய “இந்தியா” கூட்டணியின் 3 கூட்டங்களிலும் நிதிஷ்குமாரின் இந்தி மொழி பேச்சை மனோஜ் ஜாதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அதனடிப்படையில்தான் இம்முறையும் டிஆர் பாலு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆனால் “இந்தியா” கூட்டணி மீது ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் நிதிஷ்குமார் தமது கோபத்தை நேற்று திமுக தலைவர்கள் மீது வெளிப்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.