20 முறைக்கு மேல் இடிந்து விழுந்த சில்க்யாரா சுரங்கம் : வெளியான பரபரப்பு தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 7:55 pm

20 முறைக்கு மேல் இடிந்து விழுந்த சில்க்யாரா சுரங்கம் : வெளியான பரபரப்பு தகவல்!!!

மலைமாநிலம் என அழைக்கப்படும் உத்தரகாண்ட்டில், உத்தரகாசி மாவட்டத்தில் அமைக்கப்படும் சாலை பணிகளின் தொடர்ச்சியாக எண்-134 தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா வளைவு – பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுரங்க நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களுக்கு பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த சுரங்கம் இடிந்து விழுவது இது முதல் முறை அல்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு புறம் எதிரெதிர் திசையில் மக்கள் பயணிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்ட சுமார் 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சுரங்க பாதையில் இது போன்ற நிகழ்வுகள் சுமார் 20 முறை ஏற்பட்டுள்ளது.

சுரங்கங்கள் அமைக்கும் பணியில் இடிந்து விழும் நிகழ்வு வழக்கமான ஒன்றுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இம்முறை 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். ‘கேவிட்டி’ என அழைக்கப்படும் இத்தகைய இடிந்து விழும் நிகழ்வுகள், சில்க்யாரா பகுதியை விட பார்கோட் பகுதியில் அதிகம் நடந்தன என பொதுத்துறை நிறுவனமான தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன (NHIDCL) இயக்குனர் தெரிவித்துள்ளார்.

  • big boss balaji new movie news பல பெண்களை ஏமாற்றிய பிக் பாஸ் பாலாஜி..சரமாரியாக தாக்கிய பெண் ஆட்டோ டிரைவர்..!
  • Views: - 400

    0

    0