அக்கா திருமணத்தை தடுத்து நிறுத்தி மணமகனை கட்டிக் கொண்ட தங்கை : ‘நினைத்தேன் வந்தாய்’ பட பாணியில் நடந்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2023, 3:12 pm

பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் என்ற கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் என்பவர் தான் மணமகன்.

அடுத்த திருமணம் நடைபெறும் நாளன்று மணமேடைக்கு வந்த மணமகனும் மணமகளும் மாலையை மாற்றிக்கொண்டனர். உறவினர்கள் கூடியிருந்த நேரத்தில் தாலி கட்ட வேண்டிய சம்பிரதாயம் நடந்தது.

அப்போது மண்டபத்தின் மாடியில் ஏறி நின்ற மணப்பெண்ணின் தங்கை, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். மேலும் அவர் ரகளையில் ஈடுபட, திருமண வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது அந்த பெண்ணிடம் பெற்றோர் பேசி பார்த்தனர். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர்.

போலீசார், உள்ளூர் தலைவர் மற்றும் மணமகனிடம் பேசினர், அப்போது தான் மணமகன் ராஜேஷ் சொன்ன தகவல் அங்குள்ளவர்களை தூக்கி வாரிப்போட்டது.

சாப்ராவில் உள்ள கல்லூரியில் படிக்கும் போதே மணமகளின் தங்கை புதுலுடன் காதல் வயப்பட்டதாகவும் , இருவரும் காதலித்து வந்த நிலையில், வீட்டில் பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், திருமணம் வேண்டாம் என சொல்லியும் வற்புறுத்தி இந்தளவுக்கு வந்ததாகவும் கூறினார்.

அக்காவுடன் நிச்சயம் செய்யப்பப்டட பிறகு, புதுல் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார். இதையடுத்து தனது தங்கையே மணமகனை கட்டிக் கொள்ளட்டும் என அக்கா கூறியதால், பஞ்சாயத்து முடிந்து மணப்பெண்ணின் தங்கையை மணமகன் மணமுடித்தார்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 481

    0

    0