சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு.. ராகுல் காந்திக்கு மீண்டும் சிக்கல்.. விரைவில் சம்மன்?!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2024, 11:58 am
rahul
Quick Share

கடந்த 2023 மார்ச் மாதம் லண்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசுகையில், இந்துத்துவா தலைவர் V.D.சாவர்க்கர் பற்றி பேசினார். அதில், சாவர்க்கர் எழுதிய புத்தகத்தில் என குறிப்பிட்டு, சாவர்க்கரின் நண்பர்கள் ஒரு இஸ்லாமியரை தாக்குவதாகவும், அதனை சாவர்க்கர் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்ப்பதாவும் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டு இது ஒரு கோழைத்தனமான செயல் என ராகுல் காந்தி பேசியிருந்தார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக VD சாவர்க்கரின் பேரன் சாத்யகி சாவர்க்கர் கடந்தாண்டு ஏப்ரலில் புனேயில் உள்ள நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார்.

இது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சாத்யகி அளித்து இருந்தார். ராகுல் காந்தி குறிப்பிட்டபடி, எந்த புத்தகத்தையும் சாவர்க்கர் எழுதவில்லை என்றும், திட்டமிட்டு சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த புகாரின் பெயரில், விசாரணை மேற்கொண்டு வந்த புனே போலீசார் நேற்று அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

மேலும் படிக்க: மஞ்சும்மல் பாய்ஸ் பட மோகம்.. மருதமலையில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் அத்துமீறல்.. ஷாக் VIDEO!

அதில், ராகுல் காந்தி, சாவர்க்கர் பற்றி அவதூறாக பேசியதில் முதற்கட்ட உண்மைத்தன்மை இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய சாத்யகி அசோக் சாவர்க்கரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்க்ராம் கோல்ஹட்கர், புனே போலீஸ் அறிக்கையில் இதில் உண்மைத்தன்மை இருப்பதாக கூறப்பட்டுள்ளதால், ராகுல் காந்தி ஆஜராகக் கோரி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பக்கூடும் என்று கூறினார்.

Views: - 177

0

0