பாஜகவுக்கு சறுக்கல்? மம்தா பானர்ஜி செக்? வெளியானது 2024 நாடாளுமன்ற தேர்தல் சர்வே!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2023, 4:22 pm
லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 7-8 மாதங்களே உள்ளன. தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் திமுக, காங்கிரஸ் பிரதான கட்சியாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கி உள்ளன. ஸ்மால் பாக்ஸ் இந்தியா சர்வே என்ற அமைப்பு இந்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் திமுகவின் இந்தியா கூட்டணி – 36 இடங்களை வெல்லும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி – 03 இடங்களை வெல்லும் தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றது. அதிமுக 1 இடத்தில் வென்றது. இந்த முறை திமுக கூட்டணி 2 இடங்களை இழக்கும்.
பாஜக கூட்டணி கூடுதலாக இரண்டு இடங்களை பெறும். அதாவது தமிழ்நாட்டில் இருந்து பாஜக கூட்டணிக்கு 3 எம்பிக்கள் வருவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இவர்கள் பாஜக கட்சியா, அதிமுக கட்சியா என்பது தெரிவிக்கப்படவில்லை.
இது போக கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி – 18 (-1) இடங்களை வெல்லும் வலதுசாரி கூட்டணி – 02 (+1) இடங்களை வெல்லும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி – ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் தேசிய அளவிலான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று ஸ்மால் பாக்ஸ் இந்தியா சர்வே கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதில், மேற்கு வங்கத்தின் மொத்த இடங்கள் (42) பாஜக என்டிஏ கூட்டணி – 08 இந்தியா – 34 இடங்கள் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது.
கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வென்ற 18 இடங்களில் இருந்து 10 இடங்கள் குறைந்து 8 இடங்கள் மட்டுமே பாஜக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.