பாரத் மாதா கி ஜே என பாஜகவினர் கோஷம்.. சிவன் படத்தை கையில் எடுத்த ராகுல் காந்தி : அமைதியான மக்களவை!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 3:52 pm

மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்திய அரசியல் சாசனம் வாழ்க என தனது உரையை ராகுல் காந்தி தொடங்கினார்.

இதற்கிடையே, மக்களவையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மோடி.. மோடி என முழக்கமிட்டனர்.இதற்கிடையே, மக்களவையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மோடி.. மோடி என முழக்கமிட்டனர்.

அப்போது, அவையில் சிவபெருமானின் படத்தை காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதா ? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பனார். சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்ட கூடாது என்பது அவை விதி என சபாநாயகர் தெரிவித்தார்.

பின்னர் மேற்கொண்டு அவர் கூறியதாவது:-நான் காட்டிய சித்திரத்தில் நாங்கள் பாதுகாத்த சில சிந்தனைகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.இந்தியா என்ற சிந்தனை மீது, அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நான் உள்பட எதிர்க்கட்சியினர் பலரும் குறிப்பிட்டு தாக்கப்பட்டனர்.

எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.என் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள், இரண்டு ஆண்டு சிறை தண்டனை போடப்பட்டது. என்னிடம் 55 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

எதற்கும் அஞ்சாமல் கல்லை போல அமர்ந்திருந்ததாக விசரணை அதிகாரி என்னிடம் தெரிவித்தார். என்னுடைய வீடு என்னிடமிருந்து பறிக்க்கப்பட்டது, அது குறித்து எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இந்திய அரசியலமைப்பை காப்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளது.மற்ற உயிரினங்கள் போல நாங்களும் பிறப்போம், இறப்போம். ஆனால், பிரதமர் மோடி பயாலஜிக்கலாக பிறக்காதவர்.காந்தி இறக்கவில்லை அவர் உயிருடன் தான் இருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல. நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றி தான் பேசுகின்றன. இந்த தேசம் அகிம்சையின் தேசம், அச்சப்படும் தேசமல்ல. சத்தியத்தின் பக்கமே நிற்க வேண்டும் என இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என அவர் பேசினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ