‘மழை குட்டி வா..வா..’ மழலையின் பேச்சை கேட்டு உடனே பெய்த மழை… மகிழ்ச்சியில் சிறுமி போட்ட ஆட்டம்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 December 2022, 9:27 am

கேரளா ; கேரள மாநிலத்தில் சிறுமி ஒருவர் ‘மழை குட்டி வா வா’ என மகிழ்ச்சி பொங்க நடனமாடிய போது, சிறுகணத்தில் மீண்டும் மழை வந்ததால் அந்த சிறுமி மகிழ்ச்சி அடைந்த காட்சி வைரலாகி வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் கடந்த சில தினங்களாக அவ்வப்போது, மிதமாகவும், கனமாகவும் மாறி மாறி மழை பெய்கிறது. இந்நிலையில், தன் வீட்டு மாடியில் மழை பெய்து கொண்டிருந்தபோது, நனைந்தபடி சிறுமி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மழை நின்றதால் சிறுமி ஏமாற்றம் அடைந்தாள். பின்னர், மீண்டும் மழை வராதா..? என்ற ஏக்கத்தோடு, ‘மழை குட்டி வா வா’ என மழையை மீண்டும் எதிர்பார்த்து ஆடிக் கொண்டிருந்தாள்.

அவள் அப்படி ஆடியதாலோ, என்னவோ, திடீரென மழை மீண்டும் பெய்ய துவங்கியது. அதனால், மகிழ்ச்சி பொங்க சிறுமி சாகசத்தோடு ஆடினார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி காண்போரை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

பொதுவாக, மழை பெய்யும் போது அதில் நனைந்து ஆட்டம் போடுவதை பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஆட்டம் போட்டே சிறுமி மழையை வரவழைத்திருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!