தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முதுகில் படம் எடுத்து ஆடிய பாம்பு : வைரலாகும் ஷாக் வீடியோ…!

Author: Babu Lakshmanan
29 August 2022, 3:41 pm

தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முதுகில் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிக விஷம் கொண்ட பாம்புகளில் ஒன்று நாக பாம்பு. இந்தப் பாம்புகள் கொத்துவதை விட, அது படம் எடுப்பதை பார்க்கும் போது, பார்ப்பவர்களுக்கே டரியலை உண்டாக்கும். இந்த நிலையில், வன அதிகாரி சுசந்தா நந்தா சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மர நிழலில் போடப்பட்டிருக்கும் கட்டிலில் பெண் ஒருவர் படுத்து கிடந்துள்ளார். அந்தப் பெண்ணின் முதுகில் பாம்பு ஒன்று படம் எடுத்து நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கிறது. இதனை அறியாமல் அந்தப் பெண் படுத்துக் கொண்டிருக்கிறார்.

எந்த நேரமும் பாம்பு அவரை கொத்தக் கூடிய சூழல் இருக்கும் நிலையில், இது தொடர்பான வீடியோன சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்ப்பவர்கள் அதிர்ச்சி கலந்த கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!