கோப்ரா பாம்பு கடித்ததில் பாம்பு மனிதர் துடிதுடித்து சாவு… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
14 September 2022, 9:59 am
Quick Share

ராஜஸ்தான் : ராஜஸ்தானில் பாம்பு கடித்ததில் பாம்பு பிடிக்கும் நபர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாரு மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் திவாரி (45) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் பாம்புகளை பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஷாரு மாவட்டத்தின் கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் பாம்பு புகுந்ததாக வினோத் திவாரி தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற வினோத் கடைக்குள் புகுந்திருந்த கோப்ரா வகை பாம்பை பிடித்து தான் கொண்டுவந்த பைக்குள் அடைக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக வினோத்தை பாம்பு கடித்தது. இதனை உணர்ந்த வினோத், உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு நடந்து சென்றார். ஆனால், பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே நடந்து சென்ற வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பாம்பு வினோத்தை கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 506

    1

    1