தேசிய கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை பற்றிய விவரங்களை ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2021-ம் நிதியாண்டில் மொத்தம் 7,141 நன்கொடைகள் தேசிய கட்சிகளுக்கு வழங்கபட்டுள்ளன. இதன் மதிப்பு 780.77 கோடி ரூபாய்.
இதுதொடர்பாக ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-22ம் நிதியாண்டில் மொத்தம் பாஜகவுக்கு 4,957 நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நன்கொடை மூலம் 614.626 கோடி ரூபாய் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 1,255 நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 95.45 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
கடந்த 2021-22ம் நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை முந்தைய நிதியாண்டை காட்டிலும் 31.50 சதவீதம் அதிகரித்துள்ளது.
முந்தைய நிதியாண்டை காட்டிலும் கிட்டத்தட்ட 187 கோடி ரூபாய் அதிகமாக தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
முந்தைய நிதியாண்டை காட்டிலும் கடந்த 2021-22ம் நிதியாண்டில் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடை 28.71 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020-21ம் நிதியாண்டில் பாஜகவுக்கு 477.545 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு முந்தைய நிதியாண்டை காட்டிலும் கடந்த 2021-22ம் நிதியாண்டில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2020-21ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 74.524 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.