சிவப்பு எறும்பு சட்னியில் இத்தனை விஷயங்கள் இருக்கா? புவிசார் குறியீடு கொடுக்க காரணமே இதுதான்..!!!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2024, 6:13 pm
சிவப்பு எறும்பு சட்னியில் இத்தனை விஷயங்கள் இருக்கா? புவிசார் குறியீடு கொடுக்க காரணமே இதுதான்..!!!
நாடு முழுவதும் பல வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக தனித்துவமாக விளங்கும் பொருட்களுக்கு புவிசயார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள புவிசார் குறியீடு குறித்த பேச்சுக்கள் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
மத்திய தொழில் மற்றும் வர்த்தக் துறை அமைச்சகம் சார்பில் ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டினியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதை பார்ப்போம்.
அதாவது பொதுவாக, எறும்பு என்றாலே சுறுசுறுப்புதான். ஓயாமல் தனக்கு தேவையான உணவை சேமித்து வைக்கும் பழக்கமுடையது. மனிதர்கள் குடிக்கும் டீ, காபி, சர்க்கரையில் எறும்புகள் புகுவதை நாம் பார்த்திருப்போம். சில சமயம் அதை நாம் அப்படியே குடித்திருப்போம்
நம்முடைய மூதாதையர்கள் கூட, எறும்பு இருந்தால் என்ன கண் நன்றாக தெரியும் என கூறுவார்கள். அதுபோலத்தான், சிவப்பு எறும்பு சட்னியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது, மேலும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் என ஒடிசா மக்கள் கூறுகின்றனர்.
பொருளுடைய தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி அப்பொருளை உலகளவில் எடுத்து செல்வதற்கு புவிசார் குறியீடு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.