மாமியார் மடியில் மயங்கி கிடந்த மருமகன்.. ஆடிப்போன கணவன் : நொடியில் நடந்த விபத்து.. காட்டிக் கொடுத்த பிரேத பரிசோதனை!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2023, 10:26 am

மாமியார் மடியில் மயங்கி கிடந்த மருமகன்.. ஆடிப்போன கணவன் : நொடியில் நடந்த விபத்து.. காட்டிக் கொடுத்த பிரேத பரிசோதனை!

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், ராம்துர்கா தாலுகாவில் உள்ள தன்னாலா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஃபாக்கீரப்பா. இவருடைய மருமகன் நீலப்ப ரோகண்ணாவர் 28 வயதாகிறது.

சம்பவம் நடந்த அன்று, கட்டகோலா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார் ஃபாக்கரப்பா பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார். பைக்கில் சென்றபோது, மருமகனுக்கு விபத்து ஏற்பட்டதாகவும், அதில், மருமகன் ஸ்பாட்டிலேயே உயிரிழந்தாக கூறினார்.

இதையடுத்து போலீசாரும், புகார் குறித்து வழக்கு பதிவு செய்ததுடன், விபத்து தொடர்பான விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த நீலப்ப ரோகண்ணாவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் பிரேத பரிசோதனையில் வந்த முடிவுதான் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், நீலப்ப ரோகண்ணாவர் விபத்தில் இறக்கவில்லை என்றும், மாறாக, அவரது கழுத்து நெரிக்கப்பட்டதால் எலும்புகள் முறிந்து இறந்ததாகவும் தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்திய போதுதான் பல திடுக்கிடும் தகவல் வெளியானத.

விசாரணையில் மருமகன் நீலப்ப ரோகண்ணாவருக்கும், தன்னுடைய மனைவிக்கும் தகாத உறவு இருப்பதாக ஃபாக்கீரப்பாவுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.

மாமியார் என்றுகூட பார்க்காமல், தன்னுடைய மனைவியிடம் நெருங்கி பழகுகிறாரே என்று மனதுக்குள் ஆத்திரப்பட. நாளுக்கு நாள் சந்தேகம் வலுத்தது.

உண்மையிலேயே மனைவிக்கும், மருமகனுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக நம்பிய ஃபாக்கீரப்பா, ஒரு கட்டத்தில் மருமகனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

இதற்காகவே, சம்பவத்தன்று மருமகனை பைக்கில் அழைத்து சென்ற மாமனார், யாருமில்லாத இடத்தில் வைத்து, மருமகனின் கழுத்தை நெரித்தே கொன்றுள்ளார் ஃபாக்கீரப்பா.

அதற்கு பிறகுதான், விபத்தில் மருமகன் இறந்துவிட்டதாக போலீசுக்கு தகவல் வந்துள்ளது தெரியவந்தது. இபபோது, ஃபாக்கீரப்பாவை கட்டகோலா போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 689

    0

    0