சொத்துக்காக தாயை கடத்திய மகன் : வயது முதிர்ந்த தாயை அடித்து துன்புறுத்தி காரில் இழுத்து சென்ற முன்னாள் எஸ்ஐ!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 7:06 pm

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலி நகரை சேர்ந்தவர் கோட்டேஸ்வர ராவ். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் எஸ்.ஐ ஆக வேலை செய்து ஓய்வு பெற்ற கோட்டேஸ்வரராவ் தற்போது காவலியில் வசித்து வருகிறார்.

அவருடைய தாய் மகாலட்சுமி 85 வயது. மகாலட்சுமி பெயரில் அவர் குடியிருக்கும் வீடு உள்ளது. அந்த வீட்டை தனக்கு எழுதி கொடுக்குமாறு கோடீஸ்வரராவ் தாயை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே பலமுறை பிரச்சனை ஏற்பட்டு தன்னுடைய தாயை கோட்டேஸ்வர ராவ் தாக்கி இருக்கிறார். மகனுடைய தொல்லை தாங்காமல் மகாலட்சுமி தன்னுடைய மகள் வீட்டுக்கு சென்று அங்கு தங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்ற கோட்டேஸ்வர ராவ் தாயை அடித்து துன்புறுத்தி அங்கிருந்து கடத்தி சென்று விட்டார்.

இது தொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இது பற்றி கோட்டேஸ்வர ராவ் மீது சகோதரி மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் மகாலட்சுமியை மீட்டு ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ கோட்டீஸ்வராவை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • Jailer 2 Movie Update கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!