பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏவின் மகன் : தலைமறைவானவரை தேடும் போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2023, 1:54 pm

பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏவின் மகன் : தலைமறைவானவரை தேடும் போலீஸ்!!

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இங்குள்ள சிங்குர்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருப்பவர் ராம் லாலு வைஷ்யா. இவரது மகன் பெயர் விவேகானந்த் வைஷ்யா. இவருக்கு 40 வயது ஆகிறது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாலையில் விவேகானந்த் வைஷ்யாவுக்கும், இன்னொரு தரப்புக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த விவேகானந்த் வைஷ்யா தனது துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார். மேலும் அவர் பழங்குடியினத்தை சேர்ந்த சூர்யா பிரகாஷ் கைர்வார் (வயது 34) என்பவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேகமாக சென்றுள்ளார்.

பாஜக எம்எல்ஏ மகன்

இதில் கையில் குண்டு காயமடைந்த சூர்யா பிரகாஷ் உயிருக்கு போராடினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக எம்எல்ஏ ராம் லாலு வைஷ்யாவின் மகனான விவேகானந்த் வைஷ்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி ஊழியர் சஞ்சீவ் சுக்லா என்பவரை இவர் துப்பாக்கியால் சுட்டு இருந்தார். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் உள்ள நிலையில் தான் தற்போது பழங்குடியினத்தை சேர்ந்தவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனால் விவேகான்ந்த் வைஷ்யாவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் தான் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரின் முகத்தில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியானது.

அந்த நபர் பாஜகவை சேர்ந்தவர் என கூறப்பட்ட நிலையில் அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்தகைய சூழலில் தான் தற்போது பாஜக எம்எல்ஏவின் மகன் விவேகான்ந்த வைஷ்யா பழங்குடியனத்தை சேர்ந்த சூர்ய பிரகாஷ் கைர்வாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 382

    0

    0