சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் குவிந்த காங்., தொண்டர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan3 March 2023, 2:41 pm
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்து காங்கிரஸ் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.