திமுக மாடலுக்கே டஃப் கொடுத்த சோனியா… தெலுங்கானாவில் அள்ளி வீசப்பட்ட 6 முக்கிய வாக்குறுதிகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2023, 10:59 am

இன்னும் 6 மாத காலத்திற்குள் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதனை எதிர்கொள்ள காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த வருட இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சதீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் வரவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வரும் இந்த சட்டமன்ற தேர்தல்களானது அதற்கு ஓர் முன்னோடி போல பார்க்கப்படுகிறது. இதனால் நாடே இந்த சட்டமன்ற தேர்தல்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்காக மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி நேற்று ஹைதிராபாத் தூக்குடா பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தலுக்கு மிக முக்கிய 6 வாக்குறுதிகளை அவர் கூறினார், அவையாவன,

மகாலட்சுமி திட்டம் எனும் பெயரில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை.
வீட்டு சிலிண்டர் விலை ரூ.500.
மாநிலம் முழுவதும் மகளிருக்கு அரசு பேருந்து பயணம் இலவசம்.
விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை.
வீட்டுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்.
சொந்த வீடு இல்லாதோருக்கு இலவச வீட்டுமனையுடன் 5 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
உள்ளிட்ட முக்கிய 6 வாக்குறுதிகளை கூறி, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!