தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபருக்கு சாலையில் வைத்து மானபங்கம் செய்த சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு தென் கொரியாவை சேர்ந்த பிரபல யூடியூபர் மையோசி இன் என்பவர் மும்பை புறநகர் பகுதியான ‘கர்’ என்ற இடத்தில் நேரலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரத்தில் பைக்குடன் அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவர், திடீரென மையோசி இன், கையை பிடித்து இழுத்து சென்றார்.
இதனால், அதிர்ந்து போன அவர், ‘நோ நோ’ எனக் கூறியவாறு அந்த நபரிடம் இருந்து விலகிச் சென்றார். ஆனால், விடாது துரத்திய அந்த இளைஞர், மையோசி இன்-ஐ மீண்டும் நெருங்கி வந்த அந்த இளைஞர் முத்தம் கொடுக்க முயன்றார். அவரிடம் இருந்து தப்பிய மையோசி இன்-ஐ, இரு சக்கர வாகனத்தில் வந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும், வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து மையோசி இன் மெதுவாக அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகி நடந்து சென்றார். இது அனைத்தும் அவரது சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகியது.
இந்த வீடியோ மும்பை போலீசாரின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, தாமாக முன்வந்து, “பாலியல் துன்புறுத்தல்” பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
This website uses cookies.