வானில் நிகழ்ந்த அரிய நிகழ்வு… ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் வியாழன் – வெள்ளி கோள்கள்..!!

Author: Babu Lakshmanan
1 March 2023, 11:29 am

அரிய நிகழ்வாக வானில் இன்று ஒரே நேர்கோட்டில் வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் சந்தித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றி வரும் கோள்கள் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, அதன் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அப்படி சுற்றி வரும் போது ஒரே நேர்கோட்டில் கோள்கள் வருவது என்பது வழக்கமான ஒன்றாகும். அண்மையில், வானில் வெள்ளி, வியாழன் மற்றும் நிலவு ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வை காண முடிந்தது.

அந்த வகையில், இன்று புதன்கிழமை வானில் வெப்பமான கோளான வெள்ளியும், ராட்சத கோளான வியாழனும் மிக அருகில் வருவதை காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு கோள்களும் வானத்தில் வெறும் 0.5 டிகிரி அளவு இடைவெளியில் இருக்கும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டும் சந்திக்கும் அரிய நிகழ்வை உலகம் முழுவதும் வானில் மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • manimegalai shared about quit the anchoring job பிடிச்ச வேலையை என் வாயாலயே வேண்டாம்னு சொன்னேன்- மேடையில் கலங்கிய மணிமேகலை