சபாநாயகர் தேர்தல்… இண்டியா கூட்டணி சார்பாக வேட்பாளர் அறிவித்த நிலையில் NDAக்கு ஆதரவு கொடுப்பதாக ராகுல் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2024, 1:26 pm

மக்களவை சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய பாஜக தலைமையிலான NDA கூட்டணி முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையை இன்று நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதற்காக காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உறுதியான முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.

இதனை அடுத்து, தற்போது வெளியான தகவலின்படி, பாஜக தலைமையிலான NDA கூட்டணி மக்களவை சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த முறை மக்களவை சபாநாயகராக பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, I.N.D.I.A கூட்டணி சார்பாக கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் (கே.சுரேஷ்) மக்களவை சபாநாயகர் வேட்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் மாவேலிக்காரா மக்களவை தொகுதி எம்பியாக பொறுப்பில் உள்ளார். இவர் 8 முறை தொடர்ச்சியாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது தான் மரபு என ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளோம்.

மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவதாக இருந்தால் சபாநாயகர் தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம். மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவையே மீண்டும் முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஓம் பிர்லா சந்தித்து உள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!