விரலற்ற கைகளால் KeyBoard வாசித்து அசத்திய மாற்றுத்திறனாளி சிறுவன் : திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த இசையமைப்பாளர்!! (வீடியோ)
Author: Babu Lakshmanan19 January 2023, 5:24 pm
மாற்றுத்திறனாளி சிறுவன் கீ போர்டு வாசித்து மக்களை கவர்ந்து வரும் நிலையில் வீடு தேடிச் சென்றார் கேரள திரைப்பட இசை அமைப்பாளர்
கேரள மாநிலம் காயங்குளத்தை சேர்ந்த ஷாநவாஸ் – லைலா தம்பதியின் இரு மகன்களில் மூத்த மகன் முகமது யாசீன். ஐந்தாம் வகுப்பு மாணவனான முகமது யாசீன் பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாக, கை, கால்கள் முழுமையான வளர்ச்சியன்றி காணப்பட்டார்.
ஊனம் தனது திறமைக்கும், முயற்சிக்கும் தடையல்ல என்பதை பறை சாற்றும் வகையில் இச்சிறுவன், கீபோர்டு வாசித்து கேரள மக்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது விரலற்ற ஒற்றைக் கையால் கீ போர்டு வாசிக்கும் சவாலான திறமையை சமூக ஊடகங்கள் வாயிலாக கண்டு பல பிரபலங்களும் வீடு தேடிச் சென்று பாராட்டி வருகின்றனர்.
இதற்கு மேலாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி இச்சிறுவன் குறித்து அற்புத சிறுவன் என்ற தலைப்பில் பகிர்ந்த பதிவு அதிகளவிலான மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் மலையாளத் திரைப்பட இசை அமைப்பாளர் ரிதீஷ், இந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று கீபோர்டு வாசிக்க வைத்து ரசித்ததோடு, வெகுவாக பாராட்டினார். கண்ணில் துணியை கட்டி விரலற்ற ஒற்றைக் கையால் கீபோர்டு வாசிக்கும் திறமை இவரது தனிச்சிறப்பாகும்.