பரவும் கொரோனா… தமிழக அரசுக்கு அலர்ட் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2023, 6:05 pm

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகளவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் ஒரு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகம் மட்டுமன்றி, மராட்டியம், குஜராத், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

கொரோனா பரிசோதனை, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?