எங்க மாநிலத்துல ஸ்டார்ட் பண்ணுங்க ஆனா ஒரு கண்டிஷன்.. ராகுல் காந்தி யாத்திரைக்கு மணிப்பூர் அரசு போட்ட நிபந்தனை!!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2024, 9:01 pm
எங்க மாநிலத்துல ஸ்டார்ட் பண்ணுங்க ஆனா ஒரு கண்டிஷன்.. ராகுல் காந்தி யாத்திரைக்கு மணிப்பூர் அரசு போட்ட நிபந்தனை!!
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தி தனது நீதியாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதி அளிக்கப்பத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார்.
அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். வரும் ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து இந்த ஒற்றுமை யாத்திரையை தொடங்க ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். ஏற்கனவே, மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வரும் மோதல் போக்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
முன்னதாக, இது குறித்து மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைமை கூறுகையில், மணிப்பூரில் யாத்திரை ஆரம்பிப்பதற்கு இதுவரை மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது குறைந்த நபர்களுடன் பயணத்தைத் தொடங்கலாம் என்ற நிபந்தனையுடன் மணிப்பூர் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
ராகுல் காந்தி மணிப்பூர் இம்பால் பகுதியில் இருந்து மும்பை வரை , ஜனவரி 14 – மார்ச் 20 வரையிலான இந்த யாத்திரையில் நடைபயணம் மூலமாகவும், சில இடங்களில் பேருந்து மூலமாகவும் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
0
0