திருப்பதியில் தொடங்கிய படி உற்சவம் : 3,550 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏந்தி சிறப்பு வழிபாடு செய்த பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2022, 6:08 pm

திருப்பதி மலை அடிவாரத்தில் இன்று நடைபெற்ற படி உற்சவத்தில் தென் மாநிலங்களை சேர்ந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்படி உற்சவம் என்ற பெயரில் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு செல்லும் 3 ஆயிரத்து 550 படிக்கட்டுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பூஜைகள் நடத்தி பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருப்படி உற்சவம் திருப்பதி மலை அடிவாரத்தில் இன்று நடைபெற்றது. தேவஸ்தான தாசாகித்திய திட்டம் ஏற்பாட்டில் நடைபெற்ற திருப்படி உற்சவ நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தென் மாநில பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பதி மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி கொடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் பக்தர்கள் திருமலை வரை இருக்கும் 3550 படிக்கட்டுகளுக்கு சந்தனம் இட்டு, குங்குமம் வைத்து_கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி மலையேறி சென்றனர். பின்னர் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

  • Shankar Praises Lappar Panthu Movie அலட்டிக்காம நடிக்கிறாரு…உண்மையிலே அவர் கெத்து தா…பிரபல நடிகரை புகழ்ந்து பேசிய இயக்குனர் சங்கர்…!
  • Views: - 578

    0

    0