கொண்டாட்டத்தை நிறுத்துங்க… கட்சியினருக்கு காங்கிரஸ் திடீர் அட்வைஸ் : கொந்தளித்த கார்கே!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2024, 1:57 pm

மக்களவை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கும், INDIA கூட்டணிக்கும் தோல்வியை தந்தாலும், காங்கிரஸ் கட்சி கடந்த இரு தேர்தல்களை விட அதிக இடங்களை கைப்பற்றி ஓரளவு நம்பிக்கையை கொடுத்தது.

கடந்த இரு முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் இருந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்த்தில் அமர உள்ளது. அந்த எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் யார் அமர உள்ளனர் என்ற ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று டெல்லியில் , காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் முக்கிய எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், 2 தேர்தல்களுக்கு பின்னர், நாம் மறுமலர்ச்சியை கொண்டாடி வருகிறோம். அதனை தற்போது இடைநிறுத்தி கொள்ள வேண்டும்.

​​சில மாநிலங்களில் நாம் சிறப்பாக செயல்பட்டாலும், சில இடங்களில் நமது செயல்பாடு சிறப்பானதாக இல்லை. மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு ஆட்சியை அமைத்த மாநிலங்களில் கூட (கர்நாடகா, தெலுங்கானா) அதே போல முழு வெற்றியை பெற முடியவில்லை.

மேலும் படிக்க: செத்துப் போனாலும் கெத்து போகாது.. என்கவுன்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவடி : போலீசார் தலையை துண்டிப்பதாக மிரட்டல்!

ஒவ்வொரு மாநிலம் குறித்தும் விரைவில் தனித்தனியாக ஆலோசனை நடத்த வேண்டும். சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

காலம் காலமாக காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் மாநிலங்களில் நாம் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்துவிட்டோம். நமது சொந்த நலனுக்காக இனி சரியான சமயங்களை திறம்பட கையாள வேண்டும்.

இனி நமது செயல்பாடு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். நமது செயல்பாட்டினால் தான் மக்கள் நம் மீது ஓர் நம்பிக்கையை மீண்டும் வைத்துள்ளனர்.

அதை நாம் மேம்படுத்த வேண்டும். மக்கள் அளித்த இந்த தீர்ப்பை நாம் பணிவோடு ஏற்றுக்கொள்வோம் என்றும் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

  • siruthai siva shift his office from anna nagar வீட்டை காலி செய்யும் சிறுத்தை சிவா? கங்குவா படத்தால இப்படி ஒரு நிலைமையா வரணும்?