கல்லூரி விழாவில் பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத் கூறிய மாணவர்கள் : வைரலான வீடியோ.. மாணவி உட்பட 3 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 7:51 pm

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பல கல்லூரிகள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இதில், பலரும் தங்களுக்கு பிடித்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளை புகழ்ந்து, கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் இருந்த 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர்.

இதனை பார்த்த, மற்ற மாணவ மாணவியர் திகைத்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிறுத்தும்படி கூறினர். அதன்பின்பு, அவர்கள் அமைதியாகினர்.

இந்த காட்சிகளை மற்றொரு மாணவர் வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ வைரலானது. இதுபற்றி கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, மூன்று பேரையும் சஸ்பெண்டு செய்துள்ளது.

அதன்பின்னர் போலீசார் விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?