ராமர் பாலம் குறித்து புதிய மனுவை தாக்கல் செய்த சுப்பிரமணியசுவாமி : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2023, 9:44 pm

சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணை வரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமயிலான அமர்வு முன்பு சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் முறையிடப்பட்டது.

இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு விசாரணைக்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணை வரும் என தெரிவித்தனர்.

அண்மையில் ராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • kochadaiiyaan movie rerelease soon in theatres ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…