ஒரே நேரத்தில் ஏவப்பட்ட இரு பிரம்மோஸ் ஏவுகணை…இலக்கை தாக்கி வெற்றி: கப்பல், விமானப்படைகள் அறிவிப்பு..!!

Author: Rajesh
20 April 2022, 7:04 pm

புதுடெல்லி: ஒரே நேரத்தில் போர் விமானத்தில் இருந்தும், போர்க்கப்பலில் இருந்தும் இரு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவி ஒரே இலக்கை தாக்கி இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த சகோய் வகை விமானம் பறந்து கொண்டிருந்த போது அதிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டது.

Image

இந்த ஏவுகணை கடலில் நின்றிருந்த பயன்பாடற்ற கப்பலை துல்லியமாக தாக்கியதாக விமானப்படை அறிவித்தது. இதே நேரத்தில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மற்றொரு பிரம்மோஸ் ஏவுகணையும் அந்த கப்பலை துல்லியமாக தாக்கியதாக இந்திய கப்பல்படை அறிவித்துள்ளது.

latest tamil news

மணிக்கு 3000 கிமீ., வேகத்தில் பயணிக்கும் இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பது கடினம் என்று இந்திய விமானப்படை மற்றும் கப்பற்படை அறிவித்துள்ளன.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!