உத்தரகாண்டில் திடீர் பனிச்சரிவு… நேரு மலையேற்ற வீரர்கள் 29 பேர் சிக்கி தவிப்பு : ராணுவத்தின் உதவை நாடிய முதலமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 3:38 pm

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள திரவுபதி கதண்டா மலைப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் 16 ஆயிரம் அடி உச்சியில் பனிச்சரிவு ஏற்பட்டதில், நேரு மலையேற்ற வீரர்கள் பயிற்சி மையத்தை சேர்ந்த 29 பேர் சிக்கினர்.

உடனடியாக மாநில முதல்வர் புஷ்கர் தமி ராணுவத்தின் உதவியை கோரினார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டனர். இந்தோ திபெத்திய எல்லை போலீசாரும் உதவி பணிக்கு வந்தனர்.

தொடர்ந்து விமானப்படை விமானங்கள் மூலம் 8 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை 21 பேரை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!