வெளிநாடு செல்ல முதலமைச்சருக்கு திடீர் தடை : மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு.. அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2023, 8:41 am

வெளிநாடு செல்ல முதலமைச்சருக்கு திடீர் தடை : மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு.. அரசியலில் பரபரப்பு!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வருகிற 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை மந்திரி அழைப்பு விடுத்து இருந்தார்.

இதையடுத்து அபுதாபி செல்வதற்காக முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்த மனுவை ஆய்வு செய்தார்.

பின்னர், முதலமைச்சர் கலந்து கொள்ளும் அளவுக்கு அந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல எனக்கூறி பினராயி விஜயனின் அபுதாபி பயணத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுமதி மறுத்துள்ளது.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…