மூத்த பாஜக எம்எல்ஏ உடல் நலக்குறைவால் திடீர் மரணம் : சிகிச்சை பலனின்றி பலி.. பிரதமர், முதலமைச்சர் உட்பட பலர் இரங்கல்!!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2022, 2:36 pm
ஒடிசாவில் மூத்த பா.ஜ.க. தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிஷ்ணு சரண் சேத்தி உடல்நல குறைவால் இன்று காலமானார்.
ஒடிசாவில் மூத்த பா.ஜ.க. தலைவராக அறியப்படுபவர் பிஷ்ணு சரண் சேத்தி. உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்ககப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு (வயது 61).
2000-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் ஒடிசா சட்டசபை உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 2019-ம் ஆண்டு பத்ரக் மாவட்டத்தின் தாம்நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒடிசா சட்டசபையின் எதிர்க்கட்சி துணை தலைவராக செயல்பட்டதுடன், பா.ஜ.க.வின் ஒடிசா துணை தலைவர் பதவியையும் வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், உடல்நல குறைவால் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நுரையீரல் பாதிப்பு மற்றும் மூளையில் ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகளால் 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்து கொண்டார். ஒடிசா கவர்னரான பேராசிரியர் கணேஷி லால், சேத்தியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.