காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் மரணம்… ஒரே தொகுதியில் 8 முறை எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றவர் : அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 11:08 am

கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழம்பெரும் தலைவர் ஆரியதான் முகமது (வயது 87). கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் தொகுதியில் எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கேரள முன்னாள் மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர்.

1952-ம் ஆண்டு கேரள அரசியலில் நுழைந்த அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார். தொடர்ந்து கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் 1958-ம் ஆண்டு வரை இருந்தவர்.

கேரளாவின் 10-வது சட்டசபையின்போது, காங்கிரஸ் சட்டமன்ற குழு செயலாளராகவும் இருந்தவர். 1998-2001-ம் ஆண்டு வரையில் கேரள சட்டசபையின் பொது கணக்கு குழுவின் தலைவராகவும் இருந்தவர்.

ஈ.கே. நாயனார் பதவி காலத்தில் தொழிலாளர் மற்றும் வன துறை மந்திரியாகவும், ஏ.கே. அந்தோணியின் அமைச்சகத்தில் தொழிலாளர் மற்றும் சுற்றுலா துறை மந்திரியாவும் மற்றும் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சகத்தில் மின்துறை மந்திரியாகவும் இருந்தவர்.

இந்நிலையில் உடல்நல குறைவால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 491

    0

    0