நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ.. ஓட்டம் பிடித்த பயணிகள்.. ரயில் நிலையத்தில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2024, 12:16 pm

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.

மூன்று ஏர்கண்டிஷன் ரயில் பெட்டிகள் தீ பற்றி எரிந்து கருகின.

குர்பாவில் இருந்து இன்று காலை விசாகப்பட்டினம் வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் பதினோராவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இன்னும் சற்று நேரத்தில் அந்த ரயில் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலாக திருப்பதிக்கு செல்ல இருந்த நிலையில் அதில் ஏறி பயணிப்பதற்காக பயணிகள் காத்திருந்தனர்.

அப்போது திடீரென்று ரயிலின் எம்1, பி6, பி 7 ஆகிய பெட்டிகள் திடீரென்று தீ பற்றி எரிய துவங்கின.

ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ பெரும் தீவிபத்தாக மாறி பயங்கரமாக எரிய துவங்கிய நிலையில் அவற்றிலிருந்து கரும்புகை வெளியேறியது.

இதனால் அங்கு காத்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று பெட்டிகளில் ஏற்பட்ட தீ மற்ற பெட்டிகளுக்கு பரவ வாய்ப்புகள் உள்ள காரணத்தால் மற்ற பெட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!