திருமணத்தில் நடனமாடும் போது திடீர் மாரடைப்பு : சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
11 May 2023, 1:30 pm

மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வதை அதிகம் பார்க்கமுடிகிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது, நடனமாடும் போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

அதேபோன்ற ஒரு சம்பவம் சத்தீஸ்கரின் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள டோங்கர்கர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் பலோட் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் ரௌஜ்கர் என்பதும், அவர் மாநிலத்தில் உள்ள பிலாய் ஸ்டீல் ஆலையில் பொறியாளராகப் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

மேடையில் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடிக்கொண்டிருந்த அந்த நபர், திடீரென மேடையில் ஓரத்தில் உட்காருகிறார். அடுத்த சில வினாடிகளில் மேடையிலேயே சரிந்து விழுகிறார்.

இதனை தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த நபர் மேடையில் ஆடிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 489

    0

    0